செய்த புலம்பெயர் தொழிலாளர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் சிக்கிய ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு பல்வேறு வகைகளில் சென்றுகொண்டிருக்கின்றனர்

நடந்தும் சைக்கிளிலும் இரு, நான்கு சக்கர வாகனங்களிலும், கிடைக்கும் வாகனங்கள் எல்லாம் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சில புலம்பெயர் தொழிலாளர்கள் டிராக்டர் ஏற்றி சென்ற ஒரு நீண்ட வாகனத்தில் சென்றனர்

ஒரு டிராக்டருக்கும் இன்னொரு டிராக்டருக்கும் இருக்கும் சிறிய இடைவெளியில் அவர்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் நீண்ட தூரம் பயணம் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிராக்டருக்கு இடையே மனிதர்கள் உட்கார்ந்து பயணம் செய்யும் காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படியாவது ஊர் சென்று சேர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம் என்றும் அதற்கு எந்த வாகனம் கிடைத்தாலும் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள தயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது

Leave a Reply