டிடி என்ற திவ்யதர்ஷினியின் புதிய ரொமாண்டிக்

தொலைக்காட்சி புகழ் டிடி என்ற திவ்யதர்ஷினி ஒருசில தமிழ் சினிமாக்களில் ஏற்கனவே நடித்துள்ள நிலையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினியாக மாறியுள்ளார்.

‘ரொமண்டிக்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் நாயகன் ஆகாஷ்புரி, இந்த படத்தின் தயாரிப்பாளரின் மகன் பூரி ஜெகன்னாத் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சார்மி ஒரு முக்கிய கிளாமர் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க ரொமான்ஸ் அம்சங்கள் நிறைந்த இந்த படம் டிடிக்கு ஒரு பெரிய திருப்பமாக இருக்கும் என்றும் இந்த படம் வெளிவந்தவுடன் அவருக்கு டோலிவுட்டில் வாய்ப்புகள் குவியும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply