டிசம்பர் 1 முதல் 4 சக்கர வாகனங்களில் FasTag கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

வரும் டிசம்பர் 1 முதல் அனைத்து புதிய 4 சக்கர வாகனங்களிலும் FasTag கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FasTag என்பது சுங்கக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் ஒரு கருவி. இந்த கருவி காரில் பொருத்தப்பட்டிருந்தால் சுங்கச்சாவடியில் காத்திருக்க தேவையில்லை. சுங்கச்சாவடியை கடக்கும்போது அங்குள்ள சென்சார் FasTag மூலம் தேவையான கட்டணத்தை ஆன்லைனில் உங்களுடைய அக்கவுண்டில் இருந்த எடுத்து கொள்ளும். இதற்கு நீங்கள் முன்னரே FasTagல் பிரிபெய்டு முறையில் பணம் செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

இதன்மூலம் தேவையில்லாமல் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும். டிசம்பர் 1 முதல் விற்பனையாகும் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் இந்த FasTag பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் 4 சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடி மையங்களில் ( NHAI toll booth) வாகனப்பதிவுச் சான்றிதழ், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக்கொண்டு இக்கருவியை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *