டிக்டாக் செயலியை நீக்கியது கூகுள் பிளே ஸ்டோர்

டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளதால் பெரும்பாலான பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், டிக்டாக் செயலியை டவுண்லோடு செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்

இந்த நிலையில் டிக்டாக் செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது.

Leave a Reply