டிஆர்பி எகிற போவுது: ‘பிகில்’ தயாரிப்பாளரின் அதிரடி டுவீட்

தளபதி விஜய் நடித்த ’பிகில்’வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிறு அன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரமே இருப்பதால் இசை வெளியீட்டு விழாவின் பணிகள் விறுவிறுப்பாகியுள்ளது

இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழா சன் டிவியில் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், அன்றைய் தினம் சன் டிவிக்கு டிஆர்பி எகிறும் என்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply