டாடாவின் செஸ்ட் பிரீமியோ கார் இந்தியாவில் அறிமுகம்

டாடா செஸ்ட் பிரீமியோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் டாடா செஸ்ட் 85,000 யூனிட் விற்பனையை சிறப்பிக்கும் விதமாக செஸ்ட் பிரீமியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா செஸ்ட் ஸ்டான்டர்டு மாடலை விட 13 அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

செஸ்ட் பிரீமியோ எடிஷன் மாடலில் டூயல் டோன் ரூஃப் கிளாஸி பிளாக், பியானோ பிளாக் நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது. டைட்டானியம் கிரே மற்றும் பிளாட்டினம் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் பிளாக் பூட் ஸ்பாயிலர், 15 இன்ச் வீல்ஸ் மற்றும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட வீல் கேப் வழங்கப்படுகிறது.

பின்புறம் செஸ்ட் பிரீமியோ மாடலில் பிளாக் பூட் லிட், மற்றும் ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற வெளிப்புற அம்சங்களை பொருத்த வரை ஸ்மோக்டு மல்டி-ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப், பியானோ பிளாக் ஹூட் ஸ்ட்ரிப் மற்றும் டூயல் டோன் பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதன் கேபினுள் புதிய சீட் ஃபேப்ரிக், காண்ட்ராஸ்ட் ஸ்டிட்ச்சிங், டேஷ்மோர்டு நடுவில் பிரீமியோ பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. புதிய செஸ்ட் பிரீமியோ மாடலில் 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

செஸ்ட் பிரீமியோ மாடலிலும் XM வேரியண்ட் கொண்டிருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் டாடா செஸ்ட் பிரீமியோ மாடலின் விலை ரூ.7.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *