ஜோதிகா, சிம்ரனை போல் களமிறங்கும் தேவயானி

திருமணத்திற்கு பின்னர் தங்களது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா மற்றும் சிம்ரன் நடித்த படங்கள் வெற்றி பெற்று வருவதை அடுத்து அதேபாணியில் களமிறங்க நடிகை தேவயானி முடிவு செய்துள்ளார்

தமிழ் சினிமாவில் முன்னணி ரோலில் இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், விக்ரம், அஜித், சரத்குமார் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவைத் தொடர்ந்து நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2001ம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்க முடிவு செய்துள்ள தேவயானி, கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *