shadow

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபு

ஜோதிகா நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாகவுள்ள ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் யோகிபாபு நடித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவிக்கிறது.

ரேடியோ ஆர்ஜேவாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஏ.எச். காஷிப் இசையமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே இசையமைத்தப் பாடல் அனைவரையும் மயக்கத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கலையை கதிர் கவனிக்கிறார்.

Leave a Reply