Chennai Today News

ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது யார்? உண்மையை உடைக்கும் தினகரன்

ஜெயலலிதாவை வீடியோ எடுத்தது யார்? உண்மையை உடைக்கும் தினகரன்

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எந்தவிதமான புகைப்படமும் எடுக்கவில்லை என்றும், அவருடைய அறையில் சிசிடிவி கூட இல்லை என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தற்போதைய அரசியல் குழப்பத்தில் பல உண்மைகள் வெளியே வருகின்றன. ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என்றும் அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் கூறியதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இருப்பதாகவும், அந்த வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என்று டிடிவி தினகரன் சமீபத்தில் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் அளித்த பேட்டியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை சசிகலாவே வீடியோ எடுத்ததாகவும், அப்போது அவர் நைட்டி உடையில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!