shadow

ஜெயலலிதாவை அவமதிக்கவே சர்வாதிகாரி டாஸ்க்: கமல் மீது புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சர்வாதிகாரி டாஸ்க் நடந்து வரும் நிலையில் இந்த டாஸ்க் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிப்பு செய்வதாக கமல்ஹாசன் மீதும் பிக்பாஸ் நிறுவனம் மீதும், வழக்கரிஞர் லூயிசாள் ரமேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் சர்வாதிகார டாஸ்க்கில் ஐஸ்வர்யா சர்வாதிகார ராணியாக இருந்து போட்டியாளர்களை கொடுமைப்படுத்தி வருகிறார். இதில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே போட்டியாளர்களுக்கு தெரிவித்துவிடுவர். இதில் நேற்றைய நிகழ்ச்சியில் ரித்விகா என்ற நடிகை இந்த டாஸ்க் வடநாட்டில் இருந்து வந்த ஐஸ்வர்யாவுக்கு தெரியாது. தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது இவர்களுக்கு தெரியாது என்று கூறுகிறார்.

இந்த டாஸ்க் தொடர்பாக இந்த வார இறுதியில் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் யார் என்பது போல் பேசுவார். தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய மறைந்த முன்னாள் முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறாக சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். இந்நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply