அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக ஏடிஎம்மில் இருந்து பணம் வசூலிக்கும் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி மற்றும்
மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த சலுகை ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஜூலை 1 முதல் மீண்டும் ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சலுகைக்கு முன்னர் எந்தெந்த வங்கி எந்தெந்த வகையில் கட்டணம் வசூலித்து வந்ததோ, அதே கட்டணம் மீண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வசூல் செய்யப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளதால் இதுவரை கட்டணமின்றி பணமெடுத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply