shadow

ஜூன் 23 முதல் ஆரம்பமாகிறது பிக்பாஸ் 3

பிக்பாஸ் 1 மற்றும் பிக்பாஸ் 2 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் ஞாயிறு வரை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் கமல்ஹாசனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்னும் போட்டியாளர்கள் உறுதி செய்யப்படவில்லை என்றும், போட்டியாளர்கள் குறித்த உண்மையான தகவல் நிகழ்ச்சி தொடங்கும் அன்றே தெரியும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *