ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர்

buttermilkதேவையான பொருட்கள் :

சீரகம் – 2 தேக்கரண்டி
தயிர் – 300 மி.லி.
ப.மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

* சீரகத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

* மிக்சியில் பெரிய ஜாரில் தயிர், சீரகப்பொடி, ப.மிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவைகளை போட்டு அதனுடன் 200 மி.லி. நீர் கலந்து ஒருமுறை நன்றாக ஒடவிடுங்கள். எல்லா பொருட்களும் நன்கு கலந்து விடும்.

* இதில் மேலும் 1 கப் நீர் கலந்து பருகுங்கள்.

* விருந்துகளில் நிறைய சாப்பிட்டுவிட்டு அதற்கு மேல் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுகிறோம். அரை ஜீரணத்தை கடினமாக்கும். இந்த ஸ்பெஷல் மோர் பருகினால் ஜீரணம் எளிதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *