ஜார்கண்ட் முன்னாள் முதல்வருக்கு 3 ஆண்டுகள் சிறை:டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

இந்தியாவையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா குற்றவாளி என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தற்போது அவருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மதுகோடாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் மதுகோடாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக மதுகோடா உள்பட 4 பேருக்கு 2 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா தனது பதவிக்காலத்தில் தனது செல்வாக்கால் மாநிலத்தின் பல நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாகஒதுக்கீடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை வழக்காக எடுத்த சிபிஐ, மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறைச் செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *