ஜானு’ த்ரிஷாவுக்கு ஹேக்கர்கள் கொடுத்த அதிர்ச்சி

சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் ஜானு கேரக்டரில் நடித்த த்ரிஷாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் த்ரிஷா உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்த நிலையில் அவருக்கு ஹேக்கர்கள் திடீரென அதிர்ச்சி கொடுத்துள்ளன.ர் ஆம், த்ரிஷாவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தன்னுடைய டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அதில் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தான் பொறுப்பில்லை என்றும் த்ரிஷா அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது த்ரிஷாவின் டுவிட்டர் அக்கவுண்ட் மீட்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே பிரபலமானவர்களின் டுவிட்டர் அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்பட்டு அதில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் த்ரிஷாவின் அக்கவுண்டில் ஹேக்கர்கள் பதிவு செய்யும்முன் மீட்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://twitter.com/trishtrashers/status/1053441431375876096

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *