shadow

ஜவகர் நவோதயா பள்ளி: 6-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

15
பெங்களூரு: ஜவகர்நவோதயா பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேருவதற்கு ஆர்வமுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஜவகர்நவோதயா பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு நகர மாவட்டம், பாகலூரில் உள்ள ஜவகர் நவோதயா பள்ளியில் 6-ஆம் வகுப்பில் ஒருசில இடங்கள் காலியாக உள்ளன. 2017-18-ஆம் ஆண்டில் இந்த இடங்களை நிரப்பும் வகையில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய விண்ணப்பப்படிவங்களில் சரியான தகவல்களை நிரப்பி முதல்வர், ஜவகர் நவோதயா பள்ளி, பாகலூர், பெங்களூரு நகர மாவட்டம் என்ற முகவரிக்கு நவ.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு 2017 ஜன.8-ஆம் தேதி காலை 10 மணிக்கு நுழைவுத்தேர்வு நடத்தி அதில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். விண்ணப்பப்படிவங்களை பள்ளி முதல்வரிடம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.navodayahyd.gov.in, www.invbgaloreurban ஆகிய இணையதளங்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 080-28469055 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *