shadow

ஜனவரி மாதம் இலங்கையில் தேர்தல்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே நடந்த பனிப்போர் காரணமாக கடந்த மாதம் 26ஆம் தேதி ரனில் விக்ரம சிங்கேவின் பிரதமர் பதவியை அதிரடியாக அதிபர் சிறிசேனா நீக்கினார். அதன்பின்னர் புதிய பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றார்.

இருப்பினும் ரணில், ராஜபக்சே இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்ந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதற்கிடையே, பாராளுமன்றம் 14–ம் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். நள்ளிரவு முதல் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் அதிபர் சிறிசேனா அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய நாடாளுமன்றம் ஜனவரி 17ம் தேதி பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply