சோபியா விவகாரம் குறித்து இல.கணேசன் கூறிய கருத்து

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்ற விமானத்தில் சென்ற சக பயணியும் மாணவியுமான சோபியா ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் இதுகுறித்து கூறியதாவது:

பொது இடத்தில், அதுவும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் அநாகரீகமாகக் குரல் எழுப்பியது ஒரு திட்டமிட்ட செயல். அராஜகம்,அநாகரிகம், ஜனநாயக விரோதம். அதன் பின்னணியில் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது, சதி இருக்கிறது. அது ஒடுக்கப்பட வேண்டியது.

பாஜகவுக்கு எதிரானது என்பதற்காக அச்செயலை ஆதரித்தால் அவர்களுக்கும் நாளை இதேநிலை வரும். இந்த பண்பாடற்ற செயலை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்க கூடாது. அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ ஆதரித்திருந்தால் அது பண்பற்ற செயல். அவ்வகையில் அந்தப் பெண்ணின் செயலை விட, இவர்கள் செயல் கண்டனத்துக்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *