சோனியாவுக்கு பதில் ராகுல்காந்தி: காங்கிரஸ் திடீர் அறிவிப்பு

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ், பாஜக உள்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மகேந்திரகரியில் இன்று சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் செய்ய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் சோனியா காந்தி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சோனியா காந்திக்கு பதில் அதே தொகுதியில் அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது

சோனியா காந்தியின் பிரச்சாரத்துக்கு எந்தவித காரணத்தையும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply