shadow

சைத்தான் திரைவிமர்சனம். சத்தான த்ரில்லர் படம்

saithanவிஜய் ஆண்டனி நடித்த ‘நான்’, சலீம்’, இந்தியா பாகிஸ்தான்’, மற்றும் ‘பிச்சைக்காரன் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றதால் ‘சைத்தான்’ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் முதல் 14 நிமிடங்கள் காட்சி யூடியூபில் வெளியானதால் எதிர்பார்ப்பு விகிதம் எகிறியது.

ஐ.டி. துறையில் சின்சியராக உழைத்து முன்னேறியவர் விஜய் ஆண்டனி. அழகான மனைவி அருந்தது. வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தபோது திடீர் திடீரென விஜன் ஆண்டனிக்கு ஒரு குரல் கேட்கிறது. அந்த குரல் விஜய் ஆண்டனியிடம் ஜெயலட்சுமி என்ற பெண்ணை கொலை செய்ய வற்புறுத்துகிறது. இதனால் விஜய் ஆண்டனி அசாதாரணமாகிவிடுகிறார்.

இதை கவனித்த விஜய் ஆண்டனியின் மேலதிகாரி ஒய்.ஜி.மகேந்திரா, டாக்டர் கிட்டியிடம் அழைத்து செல்கிறார். கிட்டி, விஜய் ஆண்டனியை பரிசோதனை செய்து அவருக்கு கேட்பது அவருடைய முந்தைய ஜென்மத்து குரல் என்றும், அந்த ஜென்மத்தில் நிறைவேறாத ஒன்றை இந்த ஜென்மத்தில் நிறைவேற்றும்படி அந்த குரல் சொல்வதாகவும் கண்டுபிடிக்கின்றார்.

உண்மையில் அந்த குரல் முந்தைய ஜென்ம குரலா? ஜெயலட்சுமி யார்? ஜெயலட்சுமியை விஜய் ஆண்டனி கொலை செய்தாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதே ‘சைத்தான்’ படத்தின் இரண்டாம் பாதி

விஜய் ஆண்டனி தனக்கு பொருந்தும் கேர்கடரை தேர்வு செய்வத்ஹில் வல்லவர். அதைத்தான் இந்த படத்திலும் செய்துள்ளார். ஐ.டி. ஊழியருக்கு பொருத்தமாக இருக்கும் அவர், அருந்ததி நாயரிடம் கொஞ்சுவது, குரல் கேட்டு குழம்புவது என கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அருந்ததி நாயருக்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஹோம்லி லுக் இவருக்கு ப்ளஸ்

பிளாஷ்பேக் காட்சியில் வலு குறைந்துள்ளதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்பகத்தன்மை குறைவு. ஆனாலும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் யாரும் எதிர்பாராதது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துமே கனகச்சிதம்.

விஜய் ஆண்டனிக்கு இந்த படம் இன்னொரு வெற்றி படம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் சைத்தான்’ ஒரு சத்தான த்ரில்லர் படம்.

ஆனால் சென்னையில் விடாமல் மழை பெய்து கொண்டிருப்பதால் எந்த அளவுக்கு ஓப்பனிங் வசூல் தேறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’

Leave a Reply