சேரனுக்கு இது தேவையா? கவினுக்கு கடிதம் எழுதி கடுப்பேத்தியதால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் கவினும் லாஸ்லியாவும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் அனேகமாக அவரவர் வீட்டில் கலந்து பேசி தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். இப்போதைக்கு போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று ஒரு அப்பா ஸ்தானத்தில் சேரன் கூறியது வரை ஓகே.

ஆனால் கவின், லாஸ்லியா விஷயத்தில் சேரன் கொஞ்சம் அதிகமாகவே தலையிடுகிறார். இருவரும் போட்டி முடியும் வரை காதலை வெளிப்படுத்த கூடாது என்று மீண்டும் ஒரு லட்டரை கவினுக்கு எழுதியுள்ளார். அந்த லட்டரில் ,வணக்கம் தம்பி! அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசி கொள்ளலாம். இருவரும் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினேன். அப்படியிருந்தும் லாஸ்லியாவிடம் இங்கே முடிவை சொல்ல சொல்வது நியாயமா? ’செலிபிரேட்’ பண்ணலாம் என்று நீங்கள் நினைப்பது ரொம்ப தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவிங்களா? என்று எழுதப்பட்டுள்ளது

லாஸ்லியாவின் நிஜ அப்பா இவ்வாறு கூறினால் கூட பரவாயில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் சேரன், லாஸ்லியா அப்பா-மகள் உறவு தொடருமா? என்ற சந்தேகம் இருந்து வரும் நிலையில் ஒரு அளவுக்கு மேல் லாஸ்லியாவின் வாழ்க்கையில் அவர் தலையிடுவதை பார்வையாளர்களும் ரசிக்கவில்லை என்பதை சேரன் உணருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *