shadow

சேமியா மட்டன் பிரியாணி

6தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ
சேமியா – அரை கிலோ
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 50 மில்லி
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் – 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்)
தயிர் – 4 மேசைக்கரண்டி
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி, புதினா – தலா கைப்பிடியளவு
எலுமிச்சைபழம் – பாதி
தேங்காய் பாதி – துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்)
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற சேமியாவை பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.

* மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் சிவந்தவுடன் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.

* பின்பு கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.

* சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகி விட்டது.

* மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய்பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீரின் அளவு – சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு இருக்க வேண்டும்.)

* பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.

* சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.

* அடுத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

* நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.

* பத்து நிமிடம் கழித்து திறந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

* ராம்ஜான் ஸ்பெஷல் சேமியா மட்டன் பிரியாணி ரெடி.

Leave a Reply