செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல்: நாசா தகவல்

சமீபத்தில் டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களில் புழுதிப்புயல் வீசி அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைந்ய செய்துள்ள நிலையில் விரைவில் செவ்வாய் கிரகத்திலும் அதிபயங்கரமான புழுதிப்புயல் வீசவுள்ளதாக கூறப்படுகிறது

செவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்த புழுதி புயலினால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளதாகவும், சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய வகையில் இந்த புயல் இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை செவ்வாய் கிரகத்தில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *