செளத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வரும் பிரபல பொதுத்துறை வங்கியான செளத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள 150 புரபெஷனல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 150

பணி: Probationary Officers (PO)

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2017 தேயின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விணணப்பிக்க வேண்டும். அன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018-இல் நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி, சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.southindianbank.com/UserFiles/file/Notification_Probationary_Officers_May2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *