சென்னை வருகிறது ராஜஸ்தானில் பலியான பெரியபாண்டியனின் உடல் 

ராஜஸ்தானில்  சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக காவல்துறை ஆய்வாளர் உடல் இன்று சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் வழியாக சென்னைக்கு பெரிய பாண்டியனின் உடல் கொண்டு வரப்படுவதாகவும், அவரது உடல் நண்பகல் 12.20 மணி அளவில் சென்னை வந்தடையும் என தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யவுள்ளனர்.

அதன்பின்னர் சென்னையில் இருந்து மீண்டும் பெரியபாண்டியனின் உடல் மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமம் என்ற கிராமத்திற்கு சாலை வழியே கொண்டு செல்லப்பட்டு பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்கில் ஏராளமான காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *