சென்னை பேராசிரியையை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த மாணவன் கைது!

சென்னை கல்லூரி பேராசிரியை ஒருவரை கத்தியை காட்டி பயமுறுத்தி நிர்வாணப்படுத்தி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்

ஆந்திராவை சேர்ந்த 25 வயது இளம்பெண் சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் பயின்று வந்தார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே மொழியைப் பேசுபவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது

இந்த நிலையில் தனது படிப்பு முடிவடைந்ததை அடுத்து பேராசிரியைக்கு பார்ட்டி கொடுக்க விரும்புவதாக அந்த மாணவன் கூறியுள்ளார். தன்னுடைய சொந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும், தன்னைவிட வயது குறைந்தவர் என்பதாலும் அவரை நம்பி அவருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் கல்லூரி பேராசிரியை.

மகாபலிபுரம் அருகில் உள்ள ஒரு விடுதிக்கு செல்வதாக அழைத்துச் சென்ற மாணவன், திடீரென ஒரு சவுக்குத் தோப்பில் பேராசிரியையை அழைத்து சென்று கத்தியை காட்டி பயமுறுத்தி நிர்வாணப்படுத்தி, தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் மறுநாள் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும், அவ்வாறு இணங்கவில்லை என்றால் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்

இதனை அடுத்து பேராசிரியை காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் தந்திரமாக மாணவனை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மாணவனிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியைக்கு சென்னையில் யாரையும் தெரியாது என்பதால் அவர் புகார் அளிக்க மாட்டார் என்ற தைரியத்தில் தான் எல்லை மீறியதாக கூறியுள்ளார். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாணவன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *