சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: ஆன்மீக பயணம் நிறைவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலை சென்றிருந்த நிலையில் நேற்றிரவு அவர் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

ரஜினிகாந்த் தனது மகளுடன் இமயமலை அடிவாரத்தில் உள்ள கேதாரிநாத், பத்ரிநாத், பாபா குகை போன்ற பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தார். இதனையடுத்து நேற்றிரவு அவர் சென்னை திரும்பினார்

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ‘தர்பார்’ படத்தின் டப்பிங் பணியில் ஈடுபடவுள்ளது. வரும் நவம்பர் முதல் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கதில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply