சென்னை டுமில் குப்பத்தில் பயங்கர தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

சென்னை டுமில் குப்பத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. இந்த தீ விபத்தால் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்

காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீவிபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *