சென்னை – சேலம் 8 வழிச்சாலை வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

சென்னை – சேலம் எட்டு வழி சாலை குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்ததும் அதனை மாநில அரசு செயல்படுத்த முயற்சி செய்தது

ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டமும் நடத்தியது

ஆனால் தற்போது சென்னை – சேலம் எட்டு வழி சாலை தேவை என்று பாராளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியுள்ளார். சென்னை – சேலம் எட்டு வழி சாலை பசுமை திட்டத்தை நிறைவேற்றினால் பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும் என்று கூறினார். அப்போது சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த திட்டத்தை நீங்கள் தானே எதிர்க்கின்றீர்கள் எனக் கூறிய போது தயாநிதி மாறன் மழுப்பலாக பதில் கூறியது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply