சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் விடுத்த தொலைபேசி மிரட்டலால் டிஜிபி அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்த மர்ம தொலைபேசி குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசாரின் அதிரடி விசாரணையால் சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் பாலகிருஷ்ணராஜா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *