சென்னையில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டி: இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி-20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை பார்க்க குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.1200 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை ஆஸ்திரேலியா- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இரு அணி வீரர்கள் விவரம்:-

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், வார்னர், ஆஸ்டன் ஆதர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர், மேக்ஸ் வெல், மேத்யூ ஹடே, கும்மின்ஸ், பல்க்குனர், ஹாசல்வுட், டிரெவிஸ்வொட், ஸ்டோனிஸ், ஆடம்சம்பா.

இந்திய போர்டு தலைவர் லெவன்: குர்கீத்சிங்மேன் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, ரகீல்ஷா, சந்திப்சர்மா, மன்யக் அகர்வால், அவேஷ் கான், சிவம் சவுத்ரி, கோசுவாமி, கார்னீவர், குல்வந்த், குஷாங்பட்டேல், கோவிந்தா போடர், நிதிஷ்ரானா.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *