சென்னையிலும் 8 வழி சாலை முதல்வர் அறிவிப்பு

சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில் சென்னையிலும் 8 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்குளத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள நான்கு வழிச்சாலையை 8 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் இதனால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசு இந்த திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறைவது மட்டுமின்றி விபத்துக்களும் குறையும் என்றும் தமிழ்நாட்டில் தற்போது அனைத்து இடங்களிலும் சாலைகள் அமைத்து கொண்டு வரும் அரசு அதிமுக அரசு என்றும் முதல்வர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *