சென்னையின் பல பகுதிகளில் மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் தேனாம்பேட்டை, வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று காலை மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென்று பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலை முதல் சென்னையின் அண்ணாநகர், ரெட்டேரி, அடையாறு, கொளத்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது. வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூ அருகே ஆட்டுக்காரனூர் உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *