சென்னைக்கு வரும் வாஜ்பாய் அஸ்தி: காவிரி, வைகை, பவானியில் கரைக்கப்படுகிறது

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுவதற்காக நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது.

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 17ம் தேதி உயிரிழந்த நிலையில். அவரது உடல் உரிய அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை ஏற்கனவே கங்கை உள்பட முக்கிய புண்ணிய நதிகளில் கரைக்கப்பட்ட நிலையில் நாளை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்படுகிறது

பின்னர் சென்னை அடையாறு, ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரை வைகை ஆறு, ஈரோடு பவானி ஆறு, திருச்சி காவிரி ஆறு ஆகிய இடங்களில் அஸ்தி கரைக்கப்பட உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *