செக்க சிவந்த வானம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா என நான்கு ஹீரோயின்களூம், பிரகாஷ்ராஜ் உள்பட இன்னும் ஒருசில முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.

தமிழில் ‘செக்க சிவந்த வானம்’ என்ற தலைப்பிலும் தெலுங்கில் ‘நவாப்’ என்ற தலைப்பிலும் இந்த படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *