shadow

சூர்யா, விக்ரமுடன் போட்டி போடும் கேப்டன் மகன்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து முடித்துள்ள இரண்டாவது படமான ‘மதுர வீரன்’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள பொங்கல் தினத்தில் ‘மதுரவீரன்’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சண்முகப்பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், ஜி.மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே இனிமே இப்படித்தான், கட்டப்பாவை காணோம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply