சூர்யா பட பாடலை தொடங்கிவிட்டேன்: ஜிவி பிரகாஷ்

நடிப்பு, இசை என இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ், சூர்யாவின் 38வது படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்காரா இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் பணியை தொடங்கிவிட்டதாகவும், விரைவில் பாடல்களை இயக்குனரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூர்யா தற்போது ‘என்.ஜிகே’ மற்றும் ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பதும் இவற்றில் என்.ஜி.கே திரைப்படம் வரும் மே 31ஆம் தேதியும் அதனையடுத்து ஒருசில வாரங்களில் ‘காப்பான்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply