சூர்யாவுக்கு பதில் அனுஷ்கா? கவுதம் மேனன் ஸ்கிரிப்டில் அதிரடி மாற்றம்

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது சூர்யா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்

சுதா கொங்கரா இயக்கத்தில் ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக ஹரி, வெற்றிமாறன், பாலா என அடுத்தடுத்த இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளதால் கௌதம் மேனனுக்கு சூர்யாவை இயக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை

இதனால் சூர்யாவுக்கு என தயார் செய்து வைத்திருந்த மாஸ் ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் செய்து, சூர்யா கேரக்டரை பெண் கேரக்டராக மாற்றி, அதில் அனுஷ்காவை நடிக்க வைக்க கௌதம் மேனன் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த கதைக்கு திரைக்கதை வசனம் எழுத ஒரு பிரபல எழுத்தாளர் அவர் அணுகி உள்ளதாகவும் இருவரும் இணைந்து இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply