சூர்யாவின் ‘காப்பான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் நேற்றிரவு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த டீசரில் இந்த படம் ஆகஸ்ட் வெளியீடு என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் ‘காப்பான்’ படத்தை தயாரித்துள்ள லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே மே 31ஆம் தேதி சூர்யாவின் ‘என்.ஜி.கே. ரிலீஸ் ஆவதால் மூன்று மாத இடைவெளியில் சூர்யாவின் இன்னொரு படம் ரிலீஸ் என்பது சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாகவே கருதப்படுகிறது.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *