சூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்த ‘சர்கார்’ நடிகர்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியான ‘சர்கார்’ திரைப்படம் பல தடைகளை தகர்த்து வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக ஒரு சிறிய கேரக்டரில் நடிகர் பிரேம்குமார் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரேம் தற்போது சூர்யா நடித்து வரும் ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பிரேம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘காப்பான்’ படத்தின் சண்டிகார் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ‘காப்பான்’ படத்தில் சூர்யாவுடன், மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். கே.வி.ஆனந்த் இயக்க்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *