shadow

’சூரரைப்போற்று’ சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஜிவி பிரகாஷ் தகவல்

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை சூர்யா பாடி இருப்பதாகவும், மாறா தீம் என்ற இந்த பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சூர்யாவின் ரசிகர்கள் சந்தோசம் அடைந்துள்ளனர்

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *