shadow

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தலா 201 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது

இந்த சூப்பர் ஓவரில் மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெங்களூர் அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இதனை அடுத்து பெங்களூர் அணிக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விராட்கோலி ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்

இதனை அடுத்து நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி 5வது இடத்தில் உள்ளது. மும்பை அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *