சுற்றுலாப் பயணிகளின் மடியில் உட்கார முயன்ற சிங்கம்: ஒரு ஆச்சரியமான சம்பவம்

விலங்கியல் பூங்காவில் சிங்கத்தை வேடிக்கைப் பார்க்க வந்தவர்களின் வாகனத்தில் சிங்கம் ஒன்று ஏறி உட்கார்ந்தது. ஆனால் அதைக் கண்ட சுற்றுலா பயணிகள் யாரும் பதட்டமடையவில்லை.

உக்ரைனில் டைகன் சஃபாரி பார்க் என்ற பூங்காவில் சுற்றுலா பயணிகள் சிங்கத்தை வேடிக்கை பார்க்க வந்த வாகனத்துக்குள்ளயே சிங்கம் ஏறி உட்கார்ந்தது. ஆனால் சுற்றுலா பயணிகளை சிங்கம் எதுவும் செய்யாமல் அவர்களை பிரியத்துடன் நாக்கால் நக்கி அவர்கள் மடியில் ஏறி உட்கார முயற்சி செய்தது. செல்லப்பிராணி போல நடந்து கொண்ட சிங்கத்தின் நடவடிக்கையை வந்திருந்தவர்களும் தொடர்ந்து படம் பிடித்தனர்.

இந்த வீடியோ இப்போது பலரால் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது. சிங்கத்தின் இந்த செயல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இவ்வளவு சிநேகமான சிங்கத்தை பார்த்ததில்லை என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இதே பூங்காவில் கடந்த மாதம் பெண் ஒருவரை சிங்கம் கடித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்தப் பூங்காவில் சுற்றுலா வருபவர்கள் விலங்குகளிடம் நெருக்கமாக பழக அனுமதிப்பதுண்டு.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *