சுரங்கம் தோண்டும் ரிக் இயந்திரம் திடீர் பழுது: சோதனைமேல் சோதனை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவனை உயிருடன் காப்பாற்ற கடந்த பல மணி நேரமாக மீட்புப்படையினர் போராடி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ஆழ்துளை கிணறு அருகே ரிக் இயந்திரம் மூலம் நேற்று காலை முதல் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திடீரென கடின பாறைகள் காரணமாக ராட்சத ரிக் இயந்திரத்தின் நுனிப்பகுதி சேதம் அடைந்ததாகவும் ராட்சத ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே நேற்றிரவு ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாகௌவ்ம் அந்த பழுது உடனடியாக சரிசெய்யப்பட்டு சுரங்கம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பழுதாகியுள்ளது மீட்புக்குழுவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Leave a Reply