shadow

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் கெஜ்ரிவால் உத்தரவை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுனருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்று தெளிவுப்படுத்தி கூறியுள்ளது. அதில் காவல்துறை, சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகள் துணைநிலை ஆளுனரின் கீழும், மீதமுள்ள துறைகளின் அதிகாரங்கள் மாநில அரசின் கீழும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலவ்ர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் நேற்று துறை ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார்கள். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பணியாளர் சேவைத் துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். துணைநிலை ஆளுனர் சில அதிகாரிகளை மாற்றி பிறப்பித்திருந்த உத்தரவுகளை ரத்து செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.

ஆனால் அவரது உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அந்த அதிகாரிகளுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி பேசினார்.

ஆனால் அதன் பிறகும் அவரது உத்தரவை டெல்லி அதிகாரிகள் அமல்படுத்த முன்வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அமைச்சர்களின் உத்தரவுகளை ஏற்க முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply