சுதந்திர தேவி சிலையில் திடீர் தீவிபத்து: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்றான நியூயார்க் ஹார்பர் தீவில் உள்ள சுதந்திர தேவி சிலை கையில் தீபத்தை ஏந்தியவாறு கம்பீரமாக இருக்கும். இந்த சிலை 151 அடி உயரம் கொண்டது.

ஹார்பர் தீவின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த சிலையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு பயன்படுத்தப்பட்ட 3 புரோடேன் கியாஸ் சிலிண்டர்களில் இருந்து வெளியான தீ மளமளவென பரவியது.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *