சீனாவில் தோன்றிய கடவுளின் கண்: பெரும் பரபரப்பு

சீனாவில் வானத்தில் கண் போன்ற மேகம் தோன்றியதை கடவுளின் கண் என சீனர்கள் வழிபட்ட நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீனாவில் உள்ள வடக்கு இன்னர் மங்கோலியா என்ற பகுதியில் வானத்தில் மேகத்தின் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்தது. இந்த காட்சியை பெண் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தி ல்பதிவு செய்தார். இந்த நிலையில், அது கடவுளின் கண் என கூறி சீன மக்கள் கமெண்ட் செய்தனர். இதையடுத்து இந்த செய்தி தீயாக மற்ற இடங்களுக்கு பரவியது. ஆனால் வானத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு குறித்து இயற்கை ஆய்வாளர்கள் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

அதே சமயத்தில் இது போன்ற விசித்திரமான இயற்கை நிகழ்வு ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வானத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததாக அவர்கள் கூறி வருகின்றனர்.. ஆனால் குளிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும் என்றும் இது ஒரு சாதாரணமான நிகழ்வுதான் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *