சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்!
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர்கள் பாண்டியராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன் ஆகியோர்களின் இயக்கத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே
தற்போது இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது ரஜினி, அஜித், விஜய் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சிவகார்த்திகேயன், நீர்வ் ஷா, சன் பிக்சர்ஸ், பாண்டிராஜன்
Leave a Reply
You must be logged in to post a comment.