சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மூன்று புதிய அப்டேட்டுக்கள் தற்போது வெளியாகியுள்ளது

ஒன்று இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமைத்துரை படங்களுக்கு பின் சிவகார்த்திகேயன் படத்திற்கு இவர் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இந்த படத்தின் முக்கிய நாயகியாக அனு இமானுவேல் அவர்களும், இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் நடிக்கவுள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் உள்ள கேரக்டரை இயக்குனர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply