சிறையில் இருக்கும் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடமா?

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் கைதாகி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து ராஜகோபாலின் இளைய மகன் சரவணன், மருமகள் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து மருத்துவரிடம் விசாரித்தனர். ராஜகோபாலுக்கு இதய துடிப்பு குறைந்து உள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *